குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும்
வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.
*
தேவையான பொருட்கள்*:முழுநெல்லிக்காய் 10, வெற்றிலை 20, கொத்தமல்லி இலை,
கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் 4, பூண்டு 6 பல், வால்
மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், நல்லெண்ணெய்
2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.
*செய்முறை*: நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை,
கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும்
சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, பொடியாக நறுக்கிய பூண்டு,
ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக
வறுக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை,
கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது
எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும். அதில்
நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு
உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.
இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில்
குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும்
ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல்
இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.Heel, ankle, calf, knee, thigh
pain effectively in the soup Nelly's success.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment