சகலரும் அறிந்திருக்க வேண்டிய 100 மருத்துவக் குறிப்புகள்- இப்பவே நோட் பண்ணுங்க!
1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது.
படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம்
பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது
பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும்
சிக்கலாக்கிவிடு ம்.
2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல்
குத்துமதிப்பாகக ் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள்
கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவு ம், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும ்
வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய
ஆபத்து இருக்கிறது.
3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி
மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே
குணமாக்கிவிடும் .
4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம்.
புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு
வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக
உள்ளது.
5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர் , மிக மெதுவாக
செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக
முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.
6. எலும்புகள், 25 வயது வரைதான்பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க
ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்த ு 25 வயது வரை சாப்பிடும்
சத்தானஉணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும ். அதன் பிறகு
சாப்பிடுவதெல்லா ம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே
உதவும்.
7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு
உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை
வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும்.
கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி
நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment